• September 18, 2025
  • NewsEditor
  • 0

ஹைதராபாத்: சைபர் குற்​ற​வாளி​களின் வலை​யில் சிக்கி ரூ.6.60 லட்​சம் பணத்தை ஏமாந்த பெண் மருத்​து​வர் மாரடைப்​பால் உயி​ரிழந்​தார்.

ஹைத​ரா​பாத்தை சேர்ந்த 76 வயதுள்ள ஒரு பெண் மருத்​து​வருக்கு கடந்த செப்​டம்​பர் மாதம் 6-ம் தேதி, பெங்​களூரு போலீஸ் சின்​னத்​துடன் ஒரு வாட்​ஸ்​ஆப் கால் வந்​துள்​ளது. அதில் பேசி​ய​வர்​கள், சிலரை வெளி​நாட்​டுக்கு விற்ற வழக்கு தொடர்​பாக உச்​சநீதி மன்​றம், ரிசர்வ் வங்​கி, கர்​நாடக போலீஸ் மற்​றும் அமலாக்​கத் துறை​யினரின் போலி கைது வாரண்ட்​களை வீடியோ கால் மூலம் காண்​பித்து உங்​களை ‘டிஜிட்​டல் கைது’ செய்​துள்​ளோம் என மிரட்டி உள்​ளனர். இதனால் பயந்து போன அவர், அவர்கள் கூறியபடி தன்​னுடைய ஓய்​வூ​தி​யத்​தில் இருந்து ரூ.6.60 லட்​சத்தை வங்கி கணக்​கிற்கு அனுப்பி உள்​ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *