• September 18, 2025
  • NewsEditor
  • 0

இம்பால்: மணிப்​பூரில் பல்​வேறு அமைப்​பு​களைச் சேர்ந்த 11 தீவிர​வா​தி​கள் கைது செய்​யப்​பட்​டனர். இனக் கலவரத்​தால் பாதிக்​கப்​பட்ட மணிப்​பூரில் தொடர்ந்து அமை​தியை ஏற்​படுத்​தும் முயற்​சி​யில் பாது​காப்பு படை​யினர் ஈடு​பட்​டுள்​ளனர். இதனால் தீவிர​வாத செயல்​களில் ஈடு​படும் அமைப்​பு​கள் கண்​காணிக்​கப்​பட்டு வரு​கின்​றன. மக்​கள் போர் குழு, மக்​கள் விடு​தலைப் படை, சோஷியலிஸ்ட் புரட்​சிகர கட்​சி, ஐக்​கிய தேசிய விடு​தலை முன்​னணி என பல பெயர்​களில் மணிப்​பூரில் தீவிர​வாத இயக்​கங்​கள் செயல்​படு​கின்​றன.

இவர்​கள் தங்​கள் இயக்​கத்​தினரை தீவிர​வாத செயல்​களில் ஈடுபட தூண்​டு​கின்​றனர். இதனால் சட்​ட​விரோத செயல்​களில் ஈடு​படும் தீவிர​வா​தி​களை கைது செய்​யும் நடவடிக்​கை​யில் பாது​காப்பு படை​யினர் நேற்று முன்​தினம் இறங்​கினர். இதில் பல்​வேறு அமைப்​பு​களைச் சேர்ந்த 11 தீவிர​வா​தி​கள் கைது செய்​யப்​பட்​டனர். அவர்​களிடம் இருந்து அமெரிக்க தயாரிப்பு எம்​-16 ரக துப்​பாக்​கி, 5 இன்​சாஸ் ரக துப்​பாக்​கி​கள், சிம் கார்​டு​கள் மற்​றும் 1 ஜீப் ஆகியவை பறி​முதல்​ செய்​யப்​பட்​டன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *