
தெலுங்கு நடிகர் தேஜா சஜ்ஜா, நடித்து பான் இந்தியா முறையில் வெளியான படம், ‘மிராய்’. பேன்டஸி படமான இதில் மனோஜ் மன்சு வில்லனாக நடித்துள்ளார் , ரித்திகா நாயக், ஜெகபதி பாபு, ஸ்ரேயா, ஜெயராம் என பலர் நடித்துள்ளனர்.
கார்த்திக் கட்டம்னேனி ஒளிப்பதிவு செய்து, இயக்கிய இந்தப் படம், செப்.12-ம் தேதி வெளியானது. ஆன்மிகத்தை இணைத்து உருவாக்கிய இந்தப் படம் தற்போது ரூ. 100 கோடி வசூலைக் கடந்துள்ளது. இது குறித்து படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தேஜா சஜ்ஜா நடிப்பில் இதற்கு முன் வெளியான ‘ஹனுமன்’ படம் ரூ.300 கோடி வசூலைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.