• September 17, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழக காவல் துறை​யின் புதிய டிஜிபியை தேர்வு செய்​வதற்​கான ஆலோ​சனைக் கூட்​டம் வரும் 26-ம் தேதி டெல்​லி​யில் நடை​பெற வாய்ப்​புள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. தமிழக காவல் துறை​யின் சட்​டம்- ஒழுங்கு டிஜிபி​யாக இருந்த சங்​கர் ஜிவால் கடந்த மாதம் 31-ம் தேதி​யுடன் பணிஓய்வு பெற்​றார்.

அடுத்த டிஜி​பியாக சீமா அகர்​வால், ராஜீவ் குமார், சந்​தீப்​ராய் ரத்​தோர் ஆகிய 3 பேரில் ஒரு​வர் நியமிக்​கப்பட வாய்ப்பு உள்​ள​தாக கருதப்​பட்​டது. ஆனால், யாரும் எதிர்​பா​ராத வகை​யில் அவர்​களுக்கு ஜூனிய​ரான நிர்​வாகப் பிரிவு டிஜிபி வெங்​கட​ராமன், கூடு​தலாக சட்​டம் – ஒழுங்கு டிஜிபி பணியை கவனிப்​பார் என உள்​துறை செய​லா​ளர் தீரஜ்கு​மார் அறி​விப்பு வெளி​யிட்​டார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *