• September 17, 2025
  • NewsEditor
  • 0

வரும் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்க இருக்கிறது பிக் பாஸ் தமிழ் சீசன் 9. கடந்த சீசனில் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய விஜய் சேதுபதியே இந்த சீசனையும் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில் டிஜிட்டல் தளத்தில் பிரபலமாக விளங்கும் பலர் போட்டியாளர்களாக களம் இறங்கலாமென்கின்றனர் பிக் பாஸ் குழுவைச் சேர்ந்தவர்கள்.

பிக் பாஸ் தொடங்குகிறது என்றாலே பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும் போட்டியாளர் குறித்த உத்தேச பட்டியல் சமூக வலைதளங்களில் வெளியாவது வாடிக்கைதான்.

பிரபலங்கள் பலர் பெயர் அதில் இடம்பெறுவதும், கடைசியில் அவர்களில் சிலர் நிகழ்ச்சிக்குள் செல்வதும் செல்லாததும் நடக்கும்.

Bigg Boss 9 – விஜய் சேதுபதி

விகடன் தளத்திலும் கடந்த சீசன்களின் போது பல போட்டியாளர்கள் குறித்த தகவல்களை எக்ஸ்க்ளூசிவாக வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம்.

அதேபோல் வரும் ஒன்பதாவது சீசன் தொடங்கும் தேதி குறித்த செய்தியையும் சில தினங்களுக்கு முன் வெளியிட்டிருந்தோம். தற்போது வரும் சீசனில் கலந்து கொள்ளலாமென எதிர்பார்க்கப்படும் சில போட்டியாளர்கள் குறித்த விபரங்களூம் நமக்குக் கிடைத்திருக்கின்றன.

பிக்பாஸ் டீம் வலை வீசியதாக, வீசிக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் அந்த சிலர் யார் எனப் பார்க்கலாமா?

மழை சீசனில் வாட்டர்மெலன்:

watermelon dhiwakar

மதுரையைச் சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் திவாகர். ‘கஜினி’ படத்தில் வாட்டர்மெலன் சாப்பிட்டபடியே தனது உதவியாளரை சூர்யா நகர்ந்து போகச் சொல்லும் காட்சியை இமிடேட் செய்து வீடியோ வெளியிட்டு அதன் மூலம் சோஷியல் மீடியாவைத் தன் பக்கம் திருப்பியவர். ‘வாட்டர் மெலன் ஸ்டார்’ என தனக்குத் தானே பட்டம் தந்து கொண்டவர், தொடர்ந்து மேலும் சில படக் காட்சிகளை கலாய்த்து வீடியோ போட்டுப் பிரபலமானார். அதேநேரம் இவரை சிலர் விமர்சிக்கவும் செய்கின்றனர். சினிமா ஏரியாவிலும் இவர் மீது பலரும் கடுப்பிலிருக்கின்றனர்.

இந்த மாதிரி தொடர்ந்து வீடியோக்கள் போட்டே பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று விடுவார் போல என்கிறார்கள். பிக்பாஸ் டீம் இவரிடம் பேசியிருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே ஜி.பி.முத்து முதலான சில சோஷியல் மீடியா என்டர்டெயினர் முந்தைய பிக்பாஸ் சீசன்களில் போட்டியாளர்களாகச் சென்றிருப்பதால், இவர் செல்லவும் நிறைய வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது. அதேநேரம் இவர்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது என்கிற கருத்தும் சேனலிலேயே இன்னொரு தரப்பிலிருந்தும் எழுகிறதாம்.

அவர் போன சீசன் இவர் இந்த சீசன்!

பிக்பாஸைப் பொறுத்தவரை ஒரு சீசனில் ஒரு போட்டியாள‌ர் உள்ளே சென்றால் இன்னொரு சீசனில் அவரது நண்பர்கள், உறவினர்கள், தொடர்புடையவர்கள் செல்வதும் வழக்கமே. நடிகை ரச்சிதா முதலில் சென்று வர அடுத்த சீசனில் நிகழ்ச்சிக்குள் சென்றார் தினேஷ். அர்ச்சனா – அருண், விஷ்ணு-சௌந்தர்யா என இன்னும் நிறைய உதாரணங்கள் சொல்லலாம்.

ப்ரியா ராமன்
Priya Raman

இந்த வரிசையில் கடந்த சீசனில் நிகழ்ச்சிக்குள் சென்ற நடிகர் ரஞ்சித்தின் மனைவி பிரியா ராமன் இந்த சீசனில் ஒரு போட்டியாளராகச் செல்லலாம் என்கிறார்கள்.

கடந்த சீசனில் ரஞ்சித் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த போது வெளியிலிருந்தபடி அவருக்கு ஆதரவாக பிரியா ராமன் பேசியது நினைவிருக்கலாம்.

பிரியா ராமனின் மருமகள்!

பிரியா ராமனின் மருமகளாக சின்னத்திரையில் பிரபலமான நடிகை சபானாவும் இந்த சீசனின் பிக்பாஸ் போட்டியாளராகச் செல்லலாம் என்கிறார்கள்.

sabana

‘குக்கு வித் கோமாளி டு பிக்பாஸ்’ கோட்டாவின் சாய்ஸாக இவரைச் சொல்கிறார்கள். இவர் செல்வாரா இல்லையா என்பதை கடைசி நேரத்தில் கன்டன்ட் டீம் கடைசி நேரத்தில் தீர்மானிக்கும் எனத் தெரிகிறது.

‘ஜோடி’ டைரக்டர்!

மாஜி ஹீரோ, ஹீரோயின், இயக்குநர் என ஒரு கேட்டகரி ஒவ்வொரு பிக்பாஸ் சீசனிலும் இருக்கும்.

பிரவீன் காந்தி
பிரவீன் காந்தி

நடிகை ரேகா, இயக்குநர் சேரன் ஆகியோர் முந்தைய சீசன்களில் சென்று வந்தது நினைவிருக்கலாம். இந்த கேட்டகிரியில் இயக்குநர் பிரவீன் காந்தியின் பெயர் அடிபடுகிறது.

இவர்கள் தவிர, ‘அமரன்’ படத்தில் நடித்த உமர், இன்ஸ்டாகிராம் பிரபலமான Aurora sinclair , சாண்டியின் உறவினரான சிந்தியா ஆகியோருடன் ஒரு திருநங்கையும் செல்ல வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *