
‘கூலி’ படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்- 2’ படத்தில் நடித்து வருகிறார்.
நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் ‘ஜெயிலர்’.
கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெரப், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மிர்னா, வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான (ஜெயிலர் 2) படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
‘ஜெயிலர்- 2’ படத்தைத் தொடர்ந்து ராஜ்கமல் மற்றும் ரெட் ஜெயிண்ட் நிறுவனத்துடன் இணைந்து, ஒரு படம் பண்ணப்போவதாக இன்று (செப். 17) சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கும்போது ரஜினிகாந்த் கூறியிருந்தார்.
இதனைத்தொடர்ந்து கோவை விமான நிலையம் சென்ற அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். “‘ஜெயிலர் -2’படப்பிடிப்பிற்காக பாலக்காடு செல்கிறேன்.
அங்கு 6 நாள் படப்பிடிப்பு இருக்கிறது. படம் அடுத்த ஜூன் மாதம் வெளியாகும்” என்று கூறியிருக்கிறார்.

மேலும் அவரிடம், “திரைக்கலைஞர்களுக்குக் கூடும் கூட்டம் வாக்குகளாக மாறுமா?” என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு அவர், ‘No Comments’ என்று பதிலளித்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…