
தமிழ்நாடு அரசியலில் நீக்கமற நிறைந்திருப்பவர் தந்தை பெரியார். பகுத்தறிவுப் பகலவன், வைக்கம் வீரர் எனச் சாமான்ய மக்களால் புகழப்படும் பெரியாரின் 147-வது பிறந்தநாள் விழா தமிழ்நாடு மட்டுமல்லாது, உலக நாடுகளிலும் அவருக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நடிகரும், எம்.பி-யுமான கமல் ஹாசன் எனப் பலரும் தந்தை பெரியாரின் பிறந்தநாளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.
இந்தநிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் தன் எக்ஸ் பக்கத்தில் தமிழில் தந்தைப் பெரியாரின் பிறந்த நாளுக்காக பதிவிட்டிருக்கிறார்.
பெரியார் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்கிறோம். சாதிய ஒடுக்குமுறை மற்றும் சமூக அநீதிகளுக்கு எதிரான அவரது இடைவிடாத போராட்டம் தலைமுறை தலைமுறையாக நமக்கு வழிகாட்டுகிறது. பெரியாரின் பகுத்தறிவு, சமத்துவம் மற்றும் சமூக சீர்திருத்தம் ஆகிய கொள்கைகள், நீதி மற்றும் முற்போக்கான சமூகத்திற்கான… pic.twitter.com/d3dc5vVCPz
— Pinarayi Vijayan (@pinarayivijayan) September 17, 2025
அவரின் பதிவில், “பெரியார் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்கிறோம். சாதிய ஒடுக்குமுறை மற்றும் சமூக அநீதிகளுக்கு எதிரான அவரது இடைவிடாத போராட்டம் தலைமுறை தலைமுறையாக நமக்கு வழிகாட்டுகிறது.
பெரியாரின் பகுத்தறிவு, சமத்துவம் மற்றும் சமூக சீர்திருத்தம் ஆகிய கொள்கைகள், நீதி மற்றும் முற்போக்கான சமூகத்திற்கான நமது போராட்டத்திற்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கின்றன.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
தொடர்ந்து பல்வேறு அரசியல் ஆளுமைகளும் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.