• September 17, 2025
  • NewsEditor
  • 0

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் தனது 82 வயதிலும் இன்னும் ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கிறார். திரைப்படங்கள், கோன்பனேகா குரோர்பதி டிவி நிகழ்ச்சி, விளம்பரங்கள், சோசியல் மீடியா என்று தன்னை எப்போதும் உற்சாகமாக வைத்திருக்கிறார்.

அமிதாப்பச்சன் கூலி (இந்தி) படத்தில் நடத்தபோது விபத்துக்குள்ளார். அந்த அனுபவத்தை கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் ஒருவருடன் பகிர்ந்து கொண்டார்.

அவர்,” கூலி படத்தில் ஏற்பட்ட விபத்தால் உயிர் பிழைத்தது ஆச்சரியமான விஷயம். விபத்து ஏற்பட்ட போது அறுவை சிகிச்சைக்கு அதிகப்படியான ரத்தம் தேவைப்பட்டது. 200 பேர் எனக்காக ரத்ததானம் கொடுத்தனர்.” என்றார்

மஞ்சள் காமாலை

மேலும் அவர், “ஆனால் அவர்கள் கொடுத்த ரத்தத்தில் ஒன்றில் மஞ்சள் காமாலை வைரஸ் தொற்று இருந்துள்ளது. அந்த நேரத்தில் அந்த வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்படவில்லை. உடம்புக்குள் இருந்த அந்த வைரஸ் தொடர்ந்து எனது கல்லீரலை சேதப்படுத்திக்கொண்டிருந்தது. 2005ம் ஆண்டு வழக்கமான உடல் சோதனையின் போதுதான் எனது 75 சதவீத கல்லீரல் அந்த வைரஸ் சேதம் செய்து இருந்தது தெரிய வந்தது. இப்போது நான் வெறும் 25 சதவீத கல்லீரலுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். உடல் சோதனை செய்துகொள்வது மிகவும் அவசியம். இது போன்ற நோய்களை கவனிக்காமல் இருப்பது மிகவும் ஆபத்தானது.” என்றார்

காசநோய்

“2000 ஆம் ஆண்டில், எனக்கு காசநோய் இருப்பது கண்டறியப்பட்டது, கிட்டத்தட்ட ஒரு வருடம் மிகவும் கடுமையான சிகிச்சை அளிக்கப்பட்டது. கோன்பனேகா குரோர்பதி என்ற நிகழ்ச்சியைத் தொடங்கப் போகும் நாளில் எனக்கு காசநோய் ஏற்பட்டது. அது முதுகெலும்பின் காசநோய். இது மிகவும் சங்கடமாக இருக்கிறது. உட்காரவோ அல்லது படுக்கவோ முடியாது. பெரும்பாலான நேரங்களில், நான் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியபோது ஒரு நாளைக்கு 8-10 வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக்கொண்டேன். ”என்று தெரிவித்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *