
‘அபூர்வ ரகங்கள்’, ‘மூன்று முடிச்சு’, ‘அவர்கள்’, ‘பதினாறு வயதினிலே’ போன்ற படங்களில் இணைந்து நடித்த கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் மீண்டும் இணைந்து எப்போது நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.
இதனிடையே இருவரும் விரைவில் இணைந்து நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன.
சமீபத்தில் கல்கி 2898 ஏடி படத்திற்காக SIIMA விருது பெற்ற நடிகர் கமல் ஹாசன், ரஜினியுடன் இணைந்து நடிப்பதை உறுதி செய்திருந்தார்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று (செப்.17) செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினியிடம் இருவரும் இணைந்து நடிப்பது தொடர்பாகக் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், ” ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரெட்ஜெயண்ட் நிறுவனத்துடன் சேர்ந்து அடுத்ததாக ஒரு படம் பண்ணப்போகிறேன். எங்கள் இரண்டு பேருக்கும் இணைந்து நடிக்க வேண்டும் என்பது ஆசை.

அதற்கு இன்னும் இயக்குநர் கிடைக்கவில்லை. அதேபோல் கதை, கதாபாத்திரம் எல்லாம் சரியாக அமைந்தால் நடிக்கிறேன். இணைந்து நடிக்க வேண்டும் என்ற ப்ளான் இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…