
சென்னை: கோயில் நிலத்தை நீர்ப்பிடிப்பு பகுதியாக மாற்ற தமிழக அரசு முயன்று வருவதாக இந்து முன்னணி குற்றம்சாட்டி உள்ளது.
இதுகுறித்து, இந்து முன்னணியின் எக்ஸ் தளத்தில் கூறப்பட்டிருப்பதாவது: சென்ன கேசவ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான 300 கோடி மதிப்புள்ள நிலத்தை சிலர் ஆக்கிரமிக்க முயற்சி செய்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க தமிழக அரசு, கோயில் நிலத்தை நீர்ப்பிடிப்பு பகுதியாக மாற்றுவதற்கு முயன்று வருகிறது. இதுபோன்று கோயில் நிலத்தை அரசு பயன்பாட்டுக்கும் அலுவலகங்கள் மற்றும் கழிப்பிடங்கள் கட்டுவதற்கும் முயற்சி செய்கின்றனர்.