
கரூர்: கரூரில் இன்று (செப்.17) நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, விருதுகள், பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார். கரூர் கோடங்கிப்பட்டியில் இன்று மாலை 5 மணிக்கு திமுக முப்பெரும் விழா தொடங்குகிறது. முன்னாள் அமைச்சரும், திமுக கரூர் மாவட்டச் செயலாளருமான வி.செந்தில்பாலாஜி வரவேற்கிறார். பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தலைமை வகிக்கிறார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார். கட்சிப் பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என். நேரு, துணை பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, திருச்சி சிவா, ஆ.ராசா, கனிமொழி, அந்தியூர் ப.செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.