
சென்னை: கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரான இந்தி மொழியை திணிக்கும் முயற்சியை மத்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் எதிர்வினையாற்றியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தி மொழி நாளையொட்டி தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்துச் செய்தியை பதிவிட்டுள்ள ஒன்றிய உள்துறை அமைச்சர், “இந்திய நாட்டின் மொழிகள் மற்றும் பேச்சு வழக்குகளுக்கு இடையே ஒரு பாலமாக இந்தி செயல்படுகிறது. இந்தி மொழி வெறும் தகவல் தொடர்பு ஊடகமாக மட்டுமல்லாமல், தொழில்நுட்பம், அறிவியல், நீதி மற்றும் நிர்வாகத்தின் அச்சாணியாக மாறுவதை உறுதி செய்வதே எங்கள் குறிக்கோள். நாட்டின் குடிமக்களை ஒன்றிணைப்பதில் இந்தி முக்கிய பங்கு வகிக்கிறது அனைத்து மொழிகளையும் இணைத்து வளர்ந்த மொழியியல் ரீதியாக தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதில் இந்தி தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கும்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்