• September 16, 2025
  • NewsEditor
  • 0

குவாஹாட்டி: அசாம் மாநிலம் சில்​சா​ரில் உள்ள என்​ஐடி-​யில் இந்​திய கலாச்​சார உறவு​கள் கவுன்​சில் (ஐசிசிஆர்) உதவித்​தொகையின் கீழ் வங்​கதேச மாணவர்​கள் படித்து வரு​கின்​றனர். இந்​நிலை​யில் கடந்த 8-ம் தேதி, இங்கு 3-ம் ஆண்டு படிக்​கும் வங்கதேச மாணவர்​கள், தங்​கள் நாட்டை சேர்ந்த இறுதி ஆண்டு மாணவர்​கள் மீது தாக்​குதல் நடத்​தினர்.

இவர்களில் படுகாயம் அடைந்த இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வன்​முறை தொடர்​பாக வங்கதேச மாணவர்​கள் 5 பேரை என்​ஐடி அதி​காரி​கள் ஓராண்​டுக்கு சஸ்​பெண்ட் செய்​துள்​ளனர். இந்த மாணவர்​களை கடந்த வாரம் விடு​தி​யில் இருந்து வெளி​யேற்​றி​யுள்​ளனர். மேலும் இவர்​களை வங்​கதேசத்​துக்கு திருப்பி அனுப்ப அதி​காரி​கள் முடிவு செய்துள்ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *