
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
மனித சமூகம் இரக்கம் பார்க்காமல் செய்த தவறின் விளைவு தான் இது ஒரு காலத்தில் ஆசைக்கவும் தேவைக்காகவும் வனவிலங்குகளை வீட்டு விலங்காக மாற்றி விட்டார்கள். குட்டிகளை ஈன்ற பிறகு அது வளர்க்க முடியாமல் தெருவில் விட்டுவிட்டு வீட்டு நாய்களை தெருநாய்க்கலாக மாற்றி விட்டார்கள். மனிதன் செய்த சமூக பிரச்சனை இப்போது மனிதனே சரி செய்ய வேண்டிய கட்டாயமாகிவிட்டது.
ஒரு பக்கம் உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கும் தெரு நாய்கள். மற்றொரு பக்கம் தெரு நாய் பற்றி எந்த தொடர்பும் இல்லாத ஒரு சமூகத்தின் தெரு நாய் களை பாதுகாக்க வேண்டும் என்ற ஆதரவு குரல்..
தெரு நாய்க்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்கள் எந்த விலங்கையும் வீட்டில் வளர்ப்பது இல்லை.. எந்த சாலையிலும் நடப்பதில்லை. பாதிக்கப்படுபவர்கள் எல்லாம் எதுவும் இல்லாதவர்கள் தான்.
அதில் நானும் ஒருவன் தான் இதுவரை வாகனத்தில் இருந்து கீழே விழாதவன் முதன் முதலில் ஒரு தெருநாயால் விழுந்து என் வாகனத்தை விற்க வேண்டிய கட்டாயமும் என்னை 15 நாள் படுக்கையில் இருக்க வேண்டிய கட்டாயமும் ஆக்கியது.. நடுத்தர குடும்பத்திற்கு 15 நாள் என்பது 45 வேலை உணவிற்கு சமம். இரண்டு மாதம் வரையாவது அதன் காட்டமிருக்கும்.
அப்போது தெருநாய்களை என்ன செய்வது சமூகத்தின் இந்த கேள்வியை பதில ஆராய்ந்து தான் ஆக வேண்டும்?
வலியோடு நோய்வாய்ப்பட்டு வயதான நாய்களை தொண்டு நிறுவனங்கள் தத்தெடுத்து அதனை குணமாப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும். இல்லையென்றால் அந்த நோய் மற்ற நாய்களுக்கு பரவாமல் இருக்க வலிகளோடு வாழ்வதற்கு பதில் கருணை செய்ய வேண்டும்.
கருத்தடை திட்டங்களும் ஒரு வகை தீர்வு. தொடர்ந்து பெரிய பிராணிகளையும் கருத்தடை செய்ய வேண்டும் கருத்தடை செய்வதால் தெரு நாய்களின் இனப்பெருக்கம் முற்றிலுமாக நின்று போகும் என கருதலாம் இது ஒரு உரிமை மீறல் என பல சமூக வாதிகள் போராடலாம் ஆனால் ஒரு பெண் நாய் ஐந்து முதல் ஏழு குட்டிகள் வரை இட முடியும் நாம் கருத்தடை செய்வதால் மீதம் ஒன்றில் இருந்து இரண்டு குட்டிகள் தப்பிக்க வாய்ப்பு இருக்கிறது.
இதனால் அதன் இனப்பெருக்கம் கட்டுக்குள் வருவதற்கு ஓரளவு காலம் பிடித்தாலும் அதனை இனம் அழியாது. பல நூற்றாண்டுகளாக மனிதன் சோறு போடுவான் மனிதன் பார்த்துக் கொள்வான் என நம்பிய இனங்களை இன்றைய அறிவியல் தொழில்நுட்பத்தினால் இப்போது மனிதன் அந்த விலங்கை கை விரித்து விட்டான்.
மனித இனத்தை நம்பி வாழ்கின்ற அந்த இனத்திற்கு வேறு என்ன தேவை இருந்து விடப் போகிறது. தன் வீட்டில் இருக்கும் நாய்களை பொதுவான காரணத்தினால் பராமரிக்க முடியாமல் தெருவில் விடுவது அது எந்த பராமரிப்பில்லாமல் சமூக விரோதியாக மாற்றிவிடுகிறது.
சமூக அக்கறை இல்லாமல் குப்பைகளை வழியில் வீசும் மனித செயல்பாடுகளும் தெருநாய்கள் தன்னுடைய தெருக்களில் அதிகரிக்க முக்கியமான காரணியாகும். நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை எந்த அளவு முக்கியமோ அதேபோல மனிதர்களும் நாய்கள் மேல் காட்டும் அன்பும் முக்கியம். ஒரு வகையில் நாய்கள் மேல் அன்பு காட்டாமல் இருப்பதே நல்லது என முடிவுக்கு வந்துவிடலாம்.
இப்படிப்பட்ட வழிகளை பின்பற்றுவதன் மூலம் தெரு நாய்கள் பாதுகாப்பாகவும் மனித உயிர்களை ஆரோக்கியமாகவும் வாழும் சூழலை உருவாக்க முடியும்.
பாதிக்கப்பட்டவனாக இருந்தாலும் ஒரு வகையில் பாவப்பட்டவனாக..
ரசூல் முகைதின் அப்பாஸ்
கன்னியாகுமரி மாவட்டம்.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!