
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31-ம் தேதிக்குள் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வது வழக்கமான ஒன்று. ஆனால் இந்த ஆண்டு கூடுதலாக நேற்று செப்டம்பர் 15-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
இந்த ஆண்டு புதிதாக வருமான வரிக் கணக்குக் தாக்கல் படிவங்கள் எளிமையாக்கப் பட்டிருக்கின்றன. அந்த இணையதளத்திலும் ஒரு சில அப்டேட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
மேலும், வருமான வரிப் படிவங்களும் தாமதமாகவே வெளியிடப் பட்டன. இதையெல்லாம் கணக்கில் வைத்து வருமான வரிக் கணக்குத் தாக்கலின் கடைசி தேதி நீட்டிக்கப்பட்டது.
‘நோட்டீஸ், அபராதம், சிறை…’ – வருமான வரி கணக்குத் தாக்கலில் இந்தத் தவறுகளைச் செய்யவே செய்யாதீர்கள்!
நேற்றுவரை 7.3 கோடி பேர் வருமான வரித் தக்கல் செய்துள்ளதாக வருமான வரித் துறை கூறியிருக்கிறது. இருப்பினும், செப்டம்பர் 15ம் தேதியான நேற்று கடைசி நேரத்தில் ஏராளமானோர் இணையதளத்தில் வரித்தாக்கல் செய்ததால் இணையதளம் சற்று முடங்கும் நிலை ஏற்பட்டு தாமதமானது, இதனால் பலரால் வரித் தாக்கல் செய்ய முடியாமல் போனது.
இந்நிலையில் இன்று செப்டம்பர் 16ம் தேதி வரை ஒருநாள் கூடுதலாக நீட்டிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி இன்றுதான் கடைசிநாள், நேற்று தாக்கல் செய்ய முடியாதவர்கள் இன்று செய்து அபராதங்களைத் தவிர்க்கவும்.
A record 7.3 crore+ ITRs have been filed till 15th Sept 2025, surpassing last year’s 7.28 crore.
We sincerely thank taxpayers & professionals for their timely compliance.
To facilitate further filings of ITRs, the due date has been extended by one day (16th September 2025). pic.twitter.com/v1iykwFNKP
— Income Tax India (@IncomeTaxIndia) September 15, 2025
பிரிவு 234A-ன் கீழ், கடைசி தேதிக்குப் பின், வருமான வரி தாக்கல் செய்தால், அதில் வருமான வரி நிலுவை இருந்தால், தாமதமாகும் ஒவ்வொரு மாதத்திற்கு வருமான வரி நிலுவைக்கு 1 சதவிகிதம் வட்டி கட்ட வேண்டும்.
பிரிவு 234F-ன் கீழ், தாமதமாக வருமான வரி தாக்கல் செய்ய ரூ.5 லட்சத்திற்கு மேல் வருமானம் இருப்பவர்கள் ரூ.5,000 அபராதம் கட்ட வேண்டும்.
ரூ.5 லட்சத்திற்குக் கீழ் வருமானம் இருந்தால், ரூ.1,000 அபராதம் கட்ட வேண்டும்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs