
விஜய் – ஜோதிகா நடித்த ‘குஷி’ திரைப்படம் செப்டம்பர் 25-ம் தேதி மறுவெளியீடு செய்யப்பட இருக்கிறது.
சமீபமாக பல்வேறு பழைய படங்கள் மறுவெளியீடு செய்யப்பட்டு வெற்றி அடைந்து வருகிறது. அந்த வரிசையில் செப்டம்பர் 25ம் தேதி, எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய் நடித்த ‘குஷி’ திரைப்படம் மறுவெளியீடு செய்யப்பட இருக்கிறது. இதனை ‘கில்லி’ படத்தினை வெளியிட்ட சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் வெளியிடவுள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக தொடங்கப்பட்டுள்ளன.