
ஆமிர் கான் நடிப்பில் சமீபத்தில் ‘சித்தாரே ஜமீன் பர்’ திரைப்படம் திரைக்கு வந்திருந்தது.
அதைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த ‘கூலி’ படத்திலும் ஒரு கேமியோ செய்திருந்தார் ஆமிர் கான்.
சமீபத்தில் அவர் ‘கூலி’ திரைப்படத்தை விமர்சித்துப் பேசியதாக ஒரு செய்தித்தாள் இணையத்தில் வைரலானது.
அந்தச் செய்தித்தாளில் உள்ளடங்கியிருந்த தகவல்களும் காட்டுத்தீயாய்ப் பரவி செய்தியாய் வெளியானது.
தற்போது அப்படியொரு விஷயத்தை ஆமிர் கான் பேசவில்லை என்றும், சுற்றி வரும் செய்தித்தாள் போலியானது எனவும் ஆமிர் கானின் தயாரிப்பு நிறுவனத்தின் சமூக வலைத்தளக் கணக்கின் மூலம் அறிவித்திருக்கிறார்கள்.
தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆமிர் கான் ‘கூலி’ திரைப்படம் குறித்து எந்தப் பேட்டியும் அளிக்கவில்லை.
சமூக வலைத்தளங்களில் ஆமிர் கான் ‘கூலி’ திரைப்படத்தை விமர்சித்ததாக ஒரு போலி பேட்டி பரவி வருகிறது.

ஆமிர் கான் தான் செய்யும் அனைத்து பணிகள் மீதும் மிகுந்த மரியாதையும், மதிப்பும் வைத்திருக்கிறார்.
ஆமிர் கான் இன்னும் இந்தத் திரைப்படத்தைப் பார்க்கவில்லை. ஆமிர் கான் படத்தைப் பார்க்கும்போது தானும் உடனிருக்க வேண்டும் என லோகேஷ் கனகராஜ் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்.
ஆனால் அது இதுவரை நடக்கவில்லை. ‘கூலி’ திரைப்படத்தின் அபாரமான வெற்றி, அதில் ஈடுபட்ட அனைவரின் புரிதலையும், கடின உழைப்பையும் பறைசாற்றுகிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…