• September 15, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: வாக்​குறு​தி​களை நிறைவேற்​ற​வில்லை என தவெக தலை​வர் விஜய் சொல்​வது மக்​கள் மனதில் எப்​போதும் நிலைக்காது என்று சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தெரி​வித்​தார். அரசு மனநல மருத்​து​வ​மனை சார்​பில், சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்​கரை​யில் நேற்று நடந்த “உலக தற்​கொலை தடுப்பு வாரம்” நிகழ்ச்​சி​யில் பங்​கேற்ற அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன், தற்​கொலை தடுப்பு விழிப்​புணர்வு உறுதி மொழியை ஏற்​றார். பின்​னர் துண்டு பிரசுரம் விநி​யோகித்​து, விழிப்​புணர்வு பதாகை ஏந்தி மனித சங்​கிலி நிகழ்​வில் பங்​கேற்​றார்.

இதில் மருத்​து​வக்​கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​குநர் சுகந்தி ராஜகு​மாரி, பொதுசு​கா​தா​ரம் மற்​றும் நோய்த் தடுப்பு மருந்​துத்​துறை இயக்​குநர் சோமசுந்​தரம், சென்னை ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை – மருத்​துவ கல்​லூரி டீன் சாந்​தா​ராம், அரசு மனநல மருத்​து​வ​மனை இயக்​குநர் மாலை​யப்​பன், மருத்​து​வர் பூர்ண சந்​திரிகா மற்​றும் மருத்​து​வர்​கள், செவிலிய மாணவர்​கள் கலந்து கொண்​டனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *