• September 15, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்னை ராயப்​பேட்டை அரசு மருத்​து​வ​மனை​யில் சிறுநீரக மருத்​து​வ​ராக பணி​யாற்றி வந்த மருத்​து​வர் ஜெய்​சன் பிலிப், கடந்த மார்ச் 14-ம் தேதி சென்னை ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனைக்கு மாற்​றப்​பட்​டார். விதி​களின்​படி, மாற்​றம் செய்​யப்​பட்ட மருத்​து​வர்​களின் சேவை பதிவேடு உடனடி​யாக புதிய பணி​யிடத்​துக்கு அனுப்​பப்பட வேண்​டும். இதனை பல முறை கேட்​டும் பதிவேட்டை அனுப்​ப​வில்லை என்​றும், லஞ்​சம் கேட்​ப​தாக​வும் மருத்​து​வர் ஜெய்​சன் பிலிப் குற்​றம் சாட்​டி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக மருத்​து​வர் ஜெய்​சன் பிலிப் தனது எக்ஸ் வலை​தளப்​ப​தி​வில், “எனது சேவை பதிவேடு உடனடி​யாக அனுப்​பப்பட வேண்​டும். நான் தின​மும் கேட்டு வரு​கிறேன். ஆனால், ரூ.1,000, ரூ.2,000 லஞ்​சம் கேட்​கின்​றனர். முதல்​வரிடம் புகார் அளித்​தா​லும், லஞ்​சம் இல்​லாமல் உங்​களு​டைய சேவை பதிவேட்டை அனுப்ப முடி​யாது என கூறுகின்​றனர். சுகா​தா​ரத்​துறை அமைச்​சர், செயலர் எனக்கு உதவ வேண்​டும்” என்று தெரி​வித்​துள்​ளார். அரசு மருத்​து​வரின் இந்த குற்​றச்​சாட்டு பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தி​யது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *