
மாானமதுரை: விஜய் வருகையால் அனைத்துக் கட்சிகளின் வாக்குகள் சிதறும் என கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் மானா மதுரை அருகே கட்டிக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ப.சிதம்பரம் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.53.50 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. அதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.
கார்த்தி சிதம்பரம் எம்.பி. அடிக்கல் நாட்டினார். ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் அரவிந்த், பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் இளங்கோவன், முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) மாரிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர், கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விஜய்க்கு பெரிய அளவில் கூட்டம் கூடியுள்ளது. தானாக வந்த கூட்டம் என்பதால் ஒரு சக்தி இருப்பதை மறுக்க முடியாது.