• September 15, 2025
  • NewsEditor
  • 0

சண்டிகர்: அமெரிக்​கா​வில் சட்​ட​விரோத​மாக குடியேறிய​தாக 33 ஆண்​டு​களுக்கு பிறகு இந்​திய மூதாட்டி ஹர்​ஜித் கவுர் (73) கைது செய்​யப்​பட்​டார். அமெரிக்​கா​வின் கலி​போர்​னியா மாகாணம், சான்​பி​ரான்சிஸ்கோ அருகே ஈஸ்ட் பே பகுதி அமைந்​துள்​ளது. கடந்த 1992-ம் ஆண்டு இந்​தி​யா​வின் பஞ்​சாப் மாகாணத்​தில் இருந்து ஹர்​ஜித் கவுர் தனது இரு மகன்​களு​டன் ஈஸ்ட் பே பகு​தி​யில் குடியேறி​னார். சுமார் 33 ஆண்​டு​களாக அவர் ஈஸ்ட் பே பகு​தி​யில் வசித்து வரு​கிறார். அவரது இரு மகன்​களுக்​கும் திரு​மண​மாகி குழந்​தைகள் உள்​ளனர்.

இந்நிலையில், அமெரிக்க குடியேற்​றத் துறை அதி​காரி​கள், சட்​ட​விரோத​மாக குடியேறிய​தாக ஹர்​ஜித் கவுரை கைது செய்​தனர். இதை எதிர்த்து சட்​ட ரீ​தி​யாக போராட அவரது குடும்​பத்​தினர் முடிவு செய்​துள்​ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *