
‘இந்தியா vs பாகிஸ்தான்’
ஆசியக்கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி முடிந்த பிறகு, பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய அணியின் வீரர்கள் கைகுலுக்க மறுத்த சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது.
இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிய போட்டி நேற்று துபாயில் நடந்திருந்தது. பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகாதான் டாஸை வென்றிருந்தார்.
டாஸின் போதுமே இரு அணியின் கேப்டன்களும் கைகுலுக்கிக் கொள்ளவில்லை. பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 129 ரன்களை எடுத்திருந்தது.
சேஸிங்கை தொடங்கிய இந்திய அணி 15.5 ஓவர்களில் 131 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
‘பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக!’
போட்டி முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் கைகுலுக்கி வாழ்த்துகளைப் பரிமாறி வெளியேறுவது விளையாட்டின் வழக்கம். ஆனால், நேற்றையப் போட்டிக்குப் பிறகு இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்தனர்.

போட்டிக்குப் பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், ‘பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் பாதிப்புக்குள்ளான மக்களின் பக்கம் நிற்பதன் மூலம் எங்களின் ஒற்றுமையை வெளிக்காட்ட விரும்புகிறோம்.
துணிச்சலையும் தைரியத்தையும் கொண்டு நின்ற எங்களின் ஆயுதப்படை வீரர்களுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறோம். இதேபோல எக்காலத்திலும் அவர்கள் எங்களுக்கு உத்வேகம் அளித்துக் கொண்டே இருப்பார்கள் என நம்புகிறோம்.
நாங்களும் எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் களத்தில் சிறப்பாக செயல்பட்டு அவர்களின் முகத்தில் புன்னகையை வரவழைப்போம்.’ என்றார்.

‘பாகிஸ்தான் கேப்டன் அதிருப்தி!’
இந்திய அணியின் வீரர்கள் கைகுலுக்க மறுத்ததில் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் கடும் அதிருப்தியடைந்தார். இதனால் போட்டிக்குப் பிறகான கேப்டன்களின் பேட்டியில் அவர் கலந்துகொள்ளவில்லை.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…