
புவனேஸ்வர்: ஒடிசாவில் காந்தமால் மாவட்டத்தின் சலகுடா பகுதியில் சேவாஸ்ரம் பள்ளி உள்ளது. இங்குள்ள விடுதியில் தங்கி பயிலும் 2-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவர்கள், சக மாணவர்கள் தூங்கி கொண்டிருக்கும் போது, அவர்களின் கண் இமையில், உடனடியாக ஒட்டிக் கொள்ளும் பசையை (குயிக் ஃபிக்ஸ்) ஊற்றி குறும்புத்தனம் செய்தனர்.
இதில் 8 மாணவர்களின் இமைகள் ஒட்டிக் கொண்டன. அந்த மாணவர்கள் தூக்கத்தில் இருந்து எழும்போது வலி மற்றும் எரிச்சலில் கூச்சலிட்டனர். இதேக் கேட்டு வந்த விடுதி காப்பாளர் மற்றும் மாணவர்கள், அவர்களை மீட்டு உடனடியாக புல்பானி பகுதியில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.