
மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் தாயார் மீனாள் அம்மாளின் படத்தை கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று திறந்துவைத்தார். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் தாயாரும், போஸ் தேவரின் மனைவியுமான மீனாள் அம்மாள் ‘அம்மா சாரிடபிள் டிரஸ்ட்’ பொருளாளராக இருந்தார்.
உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த மீனாாள் அம்மாள் கடந்த 8-ம் தேதி காலமானார். இதையடுத்து, அவரது உடல் மதுரை திருமங்கலம் அருகில் உள்ள டி.குன்னத்தூரில் ஜெயலலிதா நினைவு மண்டப வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.