
இன்று தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் பிறந்த நாள்.
இவரது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது…
“தமிழன்னை தந்திட்ட தலைமகன்!
திராவிட முன்னேற்றக் கழகம் எனும் நம் உயிரைத் தாயென அளித்திட்ட திருமகன், பேரறிஞர் அண்ணா.
தலைமகன் நிமிர்த்திய தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளதையொட்டி, திமுக, ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது.
இதையொட்டி, இந்தப் பதிவில் ஓரணியில் தமிழ்நாடு என்கிற ஹேஸ்டேக்கும் பதிவிடப்பட்டுள்ளது.
தமிழன்னை தந்திட்ட தலைமகன்!
திராவிட முன்னேற்றக் கழகம் எனும் நம் உயிரைத் தாயென அளித்திட்ட திருமகன், பேரறிஞர் அண்ணா ♥
தலைமகன் நிமிர்த்திய தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்!#ஓரணியில்தமிழ்நாடு #RememberingAnna pic.twitter.com/gIPWj2qnqv
— M.K.Stalin (@mkstalin) September 15, 2025