
கோவை: "தமிழக கல்வித்துறை வளர்ச்சி திட்ட பணிகளுக்கு மத்திய அரசு ஏற்கெனவே வழங்கிய கோடிக்கணக்கான நிதியை செலவு செய்தது தொடர்பான ரசீது கேட்டால் கொடுப்பதில்லை. இதை மறைத்து தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக தொடர்ந்து தமிழக அரசு கூறி வருகிறது" என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மாணவர்களின் கல்விக்கான நிதியை மத்திய அரசு வழங்குவதில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடர்ந்து கூறி வருகிறார். தமிழக பள்ளிகளில் உரிய கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் மரத்தடியில் அமர்ந்து படிப்பது, கழிப்பிட வசதி இல்லாதது, ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரபப்படாதது உள்ளிட்ட பல்வேறு அவலங்கள் உள்ளன.