
திண்டுக்கல்: "சசிகலாவை கூடிய விரைவில் சந்திப்பேன், செங்கோட்டையன் நல்ல செய்தி சொல்வார். டெல்லி செல்லும் எண்ணம் எனக்கு இல்லை" என திண்டுக்கல்லில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தேனியில் இருந்து சென்னை செல்ல திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வருகைதந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: செங்கோட்டையன் கொடுத்த கெடு முடிவடையும் நிலையில், அவர் திரும்பவும் ஒரு நல்லசெய்தி சொல்வார். சசிகலாவை சந்திக்க வாய்ப்பு உள்ளது. உரியநேரத்தில் சந்திப்பேன்.