
ஜார்கண்ட் மாநிலத்தின் குந்தி மாவட்டத்தில் அமைந்துள்ள செங்ரே என்ற கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
அதாவது, 40 குடும்ப உறுப்பினர்களைக் கொண்டு ஒரே குடும்பத்தினர் மட்டுமே அந்தக் கிராமத்தில் வசிக்கிறார்கள்.
மற்றவர்கள் காலப்போக்கில் நவீன வசதிகள் மற்றும் பொருளாதார வாய்ப்புகள் இல்லாததால் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளனர்.
ஆனால் இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் இங்கே தங்கி வாழ்ந்து வருகின்றனர்.
Rep image
இதுகுறித்து அந்தக் கிராமத்தில் வசிக்கும் சுதேஷ் கூறுகையில்:
“நாங்கள் இங்கு ஒரு அமைதியான வாழ்க்கையை வாழ்கிறோம். மாடு, ஆடுகளை மேய்த்து எங்களது அன்றாட வாழ்வாதாரத்தைப் பார்த்துக் கொள்கிறோம். பால் மற்றும் ஆடுகளை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் பொருளாதாரத்தையும், சிறு விவசாயம் செய்வதன் மூலம் கிடைக்கும் பொருளாதாரத்தையும் வைத்து எங்களது வாழ்க்கையை நடத்தி வருகிறோம்,” என்று அவர் தெரிவித்தார்.
செங்ரே கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் வசித்து வந்தாலும், அவர்களுக்கு அரசாங்கத்தின் நல உதவி திட்டங்கள் கிடைக்கின்றன. மக்கள் தொகை அளவைப் பொருட்படுத்தாமல், அதிகாரப்பூர்வமாக இது ஒரு கிராமமாகும் என்பதால், அவர்களுக்கும் அரசாங்கத் திட்டங்கள் கிடைப்பதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!