• September 14, 2025
  • NewsEditor
  • 0

டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில், `விகடன் டிஜிட்டல் விருதுகள்’ விழாவை முதல் முறையாக நடத்தியிருக்கிறது விகடன்.

`Best Solo Creator – Male’, `Best Solo Creator – Female’, `Best Couple Creator’ என மொத்தமாக 27 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று (செப்டம்பர் 13) நடைபெற்றது.

மதன் கௌரி

இதில், உலகம் மற்றும் உள்ளூர் நிகழ்வுகள் அனைத்தையும் நேர்த்தியாக இத்தனை ஆண்டுகள் யூட்யூப் தளத்தில் தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கும் மதன் கெளரிக்கு Digital ICON விருது வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, பலராலும் கொண்டாடப்பட்டு, மிகுந்த வரவேற்பைப் பெற்ற `OMG Show’-வில் பிரபலங்கள் கலந்துகொண்டால், என்ன கேள்வி கேட்பார் என்று மதன் கௌரியிடம் கேட்கப்பட்டது.

பிரபலங்களும், மதன் கௌரியின் கேள்விகளும்!

டிரம்ப்?

“இந்தியா மீதான வரியை எப்போ கட் பண்ணுவீங்க?’’

விஜய் மல்லையா?

“உங்க பார்வையில உங்களைப் பத்தி என்ன சொல்லுவீங்க… நீங்க நல்லவரா இல்லை கெட்டவரா?’’

நித்யானந்தா?

“கைலாசாவுக்கு பாஸ்போர்ட் எப்போ கிடைக்கும்?’’

மதன் கௌரி
மதன் கௌரி

அஜித்?

“அவரிடம் நான் சொல்லவேண்டியது ஒண்ணு இருக்கு. ஐடி கம்பெனில வேலை பார்க்கும்போது அவர் வீட்டு காம்பவுண்ட்டுல நின்னு, அவர் எப்பிடி வளர்ந்து இந்த நிலையில இருக்காரோ, அதேபோல நானும் ஆகணும்னு நினைச்சேன்… இதைச் சொல்லுவேன்.’’

விஜய்?

“2026-ல தயாராகி ஒரு கேள்வி கேட்டுக்கலாம். 2026-ல இந்த Show வரும்னு நம்புறேன்.’’

மதன் கௌரி?

“அடுத்து என்ன… நிறைய பிளான்ஸ் இருக்கு. அதையெல்லாம் செய்யணும்னு ஆசை.’’

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *