
‘இந்தியாவை அமெரிக்கா குறைத்து மதிப்பிடக்கூடாது’ என்று மயிலாப்பூர் அகாடமி பவள விழாவில் முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
‘தி மயிலாப்பூர் அகாடமி’யின் பவளவிழா கொண்டாட்ட நிகழ்ச்சி மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு பவளவிழா மலரை வெளியிட்டார். முதல் பிரதியை ஐ.நா.வுக்கான இந்தியாவின் முன்னாள் நிரந்தர பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி பெற்றுக்கொண்டார்.