• September 14, 2025
  • NewsEditor
  • 0

டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில், `விகடன் டிஜிட்டல் விருதுகள்’ விழாவை முதல் முறையாக நடத்தியிருக்கிறது விகடன்.

`Best Solo Creator – Male’, `Best Solo Creator – Female’, `Best Couple Creator’ என மொத்தமாக 27 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று (செப்டம்பர் 13) நடைபெற்றது.

மைக்செட் ஸ்ரீராம் – மிஷ்கின்

இதில், யூ-டியூப் திருவிழாவில் தன் `மைக்செட்டால்’ எல்லோரையும் ஈர்த்து, தனக்கெனப் பெரும் ரசிகர் பட்டாளத்தைச் சேர்த்து, லவ், ப்ரெண்ட்ஷிப், ட்ரெண்டிங் என எல்லாவற்றையும் பகடி செய்வதுடன், இணையத் தொடர்களில் சீரியஸ் நாயகனாகவும் பரிணமித்துக் கொண்டிருக்கும் மைக்செட் ஶ்ரீராமுக்கு Best Performer Male விருது வழங்கப்பட்டது.

விருதினை இயக்குநர் மிஷ்கின் வழங்க, ஶ்ரீராம் பெற்றுக்கொண்டார்.

அதையடுத்து மேடையில் பேசிய ஶ்ரீராம், “விகடன் கிட்ட இருந்து விருது வாங்குறது எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு.

நிறைய கிரியேட்டர்ஸ் வர்றதைப் பார்க்குறப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு.

எப்பவும், நாம புதுசா ஒண்ணை ஸ்டார்ட் பண்றப்போ டி-மோட்டிவேட் பண்ணுவாங்க. அதேதான் எனக்கும் எட்டு வருஷத்துக்கு முன்னாடி நடந்துச்சு.

மைக்செட் ஸ்ரீராம் - மிஷ்கின்
மைக்செட் ஸ்ரீராம் – மிஷ்கின்

உனக்குல்லாம் நடிக்க வராது, க்ரிஞ்ச். உன்னால முடியாது அவுட் ஆஃப் ஃபார்ம்… அப்பிடின்னு நிறைய சொன்னாங்க.

அது எதையுமே நான் கண்டுக்காம, பிடிச்சதைப் பண்ணினேன். அதுனாலதான் இன்னைக்கு இந்த விகடன் விருதைக் கையில பிடிச்சிக்கிட்டு இருக்கேன்.

சோ, என்ன ஆனாலும் பிடிச்சதைப் பண்ணுங்க.’’ என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *