
டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில், `விகடன் டிஜிட்டல் விருதுகள்’ விழாவை முதல் முறையாக நடத்துகிறது விகடன்.
`Best Solo Creator – Male’, `Best Solo Creator – Female’, `Best Couple Creator’ என மொத்தமாக 27 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன. இந்நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (செப்டம்பர் 13) மாலை 4 மணியளவில் தொடங்கியது.
பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், இன்சூரன்ஸ், பென்ஷன் திட்டம் எனத் தனிமனித முதலீடுகள் தொடங்கி, மத்திய அரசின் பட்ஜெட் வரை அனைத்தையும் செல்போன் வழியே நமக்கு எளிமையாக புரிய வைத்த ‘Finance with Harish’ சேனலுக்கு Best Finance Channel விருதை வழங்கினார் பொருளாதார நிபுணர் நாகப்பன்.
விருதை பெற்றுக்கொண்ட Finance with Harish பேசும்போது, ’’எல்லாருக்குமே வாழ்க்கையில பணம்தான் பிரச்னை. அந்தப் பணத்தை எப்படி சுலபமா சேர்க்கிறதுன்னு மக்களுக்கு எப்படி சொல்லித் தரணும்னு யோசிச்சு, இந்த பிளாட்ஃபார்மை செலக்ட் பண்ணினேன்.

என்னோட ஆசையே பள்ளிக்கல்வி பாடத் திட்டத்துலயே `ஃபைனான்ஸ்’ பாடத்தைச் சேர்க்கணும்கிறதுதான். அதுக்கான ஒரு சின்ன முயற்சிதான் நான் இப்போ எடுத்தது. பள்ளிப் பருவத்திலேயே ஃபைனான்ஸை புரிஞ்சுக்கிட்டா அதைப் பத்தி பயப்பட அவசியம் இருக்காதுன்னு நம்புறேன்’’ என்றவர், தன்னுடைய முதல் சேமிப்பைப் பற்றியும் பகிர்ந்துகொண்டார்.
’’என்னோட சின்ன வயசுல, எங்கம்மா தினமும் ஒரு ரூபாயை என்கிட்ட கொடுத்து, வீட்ல இருந்த ஒரு உடைஞ்ச மிக்ஸி ஜார்ல சேர்த்து வெக்கச் சொல்வாங்க. அப்பிடி சேர்த்து வெச்சதை மாசக் கடைசியில என்கிட்ட குடுப்பாங்க. அதுதான் என்னோட முதல் சேமிப்பு. சம்பாதிக்க நிறைய வழி இருக்குங்க. திறமையை வளர்த்துக்கிட்டா சுலபமா சம்பாதிக்கலாம்’’ என்கிறார் ஹரீஷ்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…