• September 13, 2025
  • NewsEditor
  • 0

டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில், `விகடன் டிஜிட்டல் விருதுகள்’ விழாவை முதல் முறையாக நடத்துகிறது விகடன்.

`Best Solo Creator – Male’, `Best Solo Creator – Female’, `Best Couple Creator’ என மொத்தமாக 27 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன. இந்நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (செப்டம்பர் 13) மாலை 4 மணியளவில் தொடங்கியது.

தமிழக வீரர் சாய் கிஷோர் விருதினை வழங்க கிரிக்கானந்தா பெற்றுக்கொண்டார்.

கிரிக்கெட் ஆர்வலராகப் பயணத்தைத் தொடங்கி, இன்று கிரிக்கெட் நிபுணராக இளம் வீரர்களை அடையாளப்படுத்தி கை தூக்கிவிடும் நல் தூதனாக அறியப்படும் இந்த ‘Cricanandha’-வுக்கு Best Sports Channel விருது வழங்கப்பட்டது.

இந்திய அணியில் இளம் வீரராக வளம் வரும் தமிழக வீரர் சாய் கிஷோர் இவ்விருதினை வழங்க கிரிக்கானந்தா பெற்றுக்கொண்டார்.

கிரிக்கானந்தாவுக்கு `Best Sports channel Award’ வழங்கிய கிரிக்கெட் வீரர் சாய் கிஷோர், தோனி, கோலி, குஜராத் டைமிங் கோச் நெஹ்ரா குறித்தும், கிரிக்கெட் வீரர்களுடன் தங்களது அனுபவம் குறித்தும் சுவைபட பேசினார் .

ஐபிஎல்-ஐ தாண்டி நடக்கும் லோக்கல் மற்றும் டொமெஸ்டிக் கிரிக்கெட் மூலம் உருவாகி வரும் இளைய கிரிக்கெட் வீரர்களில், தமக்கு அறிமுகமான இசக்கிமுத்து குறித்தும், அதை அடையாளப்படுத்திய கிரிக்கானந்தா டீம் குறித்தும் ஆச்சரியத்துடன் பாராட்டியவர்,

அவற்றின் மூலம் கிடைத்த இசக்கிமுத்து போன்ற இளம் வீரர்களை விருது விழாவில் குறிப்பிட்டுச் சொன்னது மிகவும் சிறப்பு.

Vikatan Digital Awards 2025
விருது விழாவில் ஒரு தருணம்

“என்னதான் குஜராத் அணிக்காக விளையாடினாலும், உள்ளுக்குள் நம்ம சொந்த ஊரு டீம் சிஎஸ்கே ஜெயிக்க வேண்டும் என்றுதான் எல்லோரும் விரும்புவார்கள். எப்பவுமே நம்ம ஊரு டீம் ஜெயிக்கணும் என்ற ஆர்வம் எல்லாருக்குமே இருப்பதுபோல எனக்கு உண்டு’’ என்றவர்,

18 வயது வரை பெற்றோர் எப்படி அவசியமோ, அதன்பிறகு தனது வாழ்க்கையில் இணைந்த இணையர் குறித்தும், வெற்றியின் பின்னால் இருக்கும் ரகசியத்தையும் கிஷோர் கூறினார்.

விருதைப் பெற்றுக்கொண்ட கிரிக்கானந்தாவுக்கு மேடையில் சாய் கிஷோர் பௌலிங் போட, கிரிக்கானந்தா பேட்டிங் ஆட பந்து பறந்து வந்து அரங்கில் விழுந்தபோது ரசிகர்கள் ஆரவாரம் செய்தார்கள்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *