• September 13, 2025
  • NewsEditor
  • 0

வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் ஸ்நாக்ஸ் வகைகளில் பிஸ்கட், குக்கீஸ்கள் தவறாமல் இடம் பெறுகின்றன. ஆனால், இவை பெரும்பாலும் மைதா மாவில்தான் செய்யப்படுகின்றன. இந்த குக்கீஸ்கள் சத்துகள் மிகுந்ததாகவும், தனித்துவமான சுவைக்காகவும் தற்போது சிறுதானியங்களில் தயாரிக்கும் முறை பரவலாக பின்பற்றப்படுகிறது. இதற்கு வர்த்தக வாய்ப்பும் நன்றாக இருப்பதால் இது சார்ந்த தயாரிப்புகள் மக்களிடையே கவனம் பெற்று வருகின்றன.

இந்தச் சிறுதானிய குக்கீஸ் தயாரிப்பு குறித்து பசுமை விகடன், உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்ப கல்லூரி(TANUVAS) இணைந்து நேரடி செயல் விளக்க பயிற்சியை செப்டம்பர் 26-ம் தேதி அன்று நடத்துகிறது. சென்னையிலிருந்து 27 கி.மீ தொலைவில் உள்ள கோடுவள்ளியில் இந்த உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரி அமைந்திருக்கிறது.

சிறுதானிய குக்கீஸ் குறித்து பயிற்சி அளிக்கும் உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் முனைவர் கற்பூர சுந்தரபாண்டியன் பேசியபோது, “சாதாரண குக்கீஸ் மைதா பயன்படுத்திதான் தயாரிக்கப்படுகிறது. குக்கீஸ்களை மைதா பயன்படுத்தாமல், கோதுமை, சிறுதானியங்களை பயன்படுத்தி செய்யும்போது நார்ச்சத்து மிகுந்த குக்கீஸ்களாகவும், உடல் ஆரோக்கியத்துக்கு உதவும் பொருளாகவும் பங்களிக்கின்றன.

கடைகளில் வாங்கப்படும் பட்டர் குக்கீஸ்கள் பெரும்பாலும் பாமாயிலை பயன்படுத்திதான் தயார் செய்யப்படுகின்றன. ஆனால், சிறுதானிய குக்கீஸை வெண்ணெய், நெய், தாவர எண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்தியும் செய்யலாம். இவற்றிலிருந்து தயார் செய்யும்போது தனித்ததொரு சுவையாக இருக்கும். அதேபோல செயற்கை மணமூட்டி பொருள்களை பயன்படுத்தி தயார் செய்யப்படும் குக்கீஸ்களுக்கு பதிலாக இயற்கையான மணமூட்டிகள் மற்றும் சுவையூட்டிகளை பயன்படுத்தி எப்படி குக்கீஸ்களை தயார் செய்யலாம் என்பது குறித்து விளக்கமாக பயிற்சி அளிக்க இருக்கிறோம்.

குக்கீஸ் தயாரிப்பு

இன்று சிறுதானிய குக்கீஸ் இல்லாத சூப்பர் மார்க்கெட்களே இல்லையென்று சொல்லும் அளவுக்கு விதவிதமான பேக்கெட்களில் சிறுதானிய குக்கீஸ்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. சிறுதானிய குக்கீஸ் தயாரிப்புகளில் தொழில்முனைவோர்கள் பலர் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக பெண்கள் அதிக அளவில் ஈடுபட்டு வருகிறார்கள். சிறிய அளவில் இயந்திரங்களைப் பயன்படுத்தி குக்கீஸ்களை தயாரித்து, சிறிய நகரங்களில்கூட தற்போது விற்பனை செய்யப்படுகின்றன. சிறுதானிய குக்கீஸ் சாப்பிடுவதற்கென ஒரு மக்கள் கூட்டமே இருக்கிறது.

மார்க்கெட்டில் சிறுதானிய குக்கீஸ்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. வழக்கமாக பிஸ்கட், குக்கீஸ் தயாரிப்பில் பயன்படும் பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா போன்றவற்றை பயன்படுத்தாமல் குக்கீஸ்களை தயார் செய்வதற்கும், அதனுடைய செல்ப் லைஃபை அதிகரிக்கவும் இந்தப் பயிற்சியில் கற்றுக் கொடுக்க இருக்கிறோம். வீட்டில் உள்ள பெண்கள் எளிதில் குக்கர்களை பயன்படுத்தியும், ஓ டி ஜி, ஓவன் ஆகியவற்றை பயன்படுத்தி வீட்டிலேயே குக்கீஸ் செய்து அழகாக பேக் செய்து வியாபாரம் செய்வதற்கு இந்த பயிற்சி சிறந்த வாய்ப்பாக அமையும்.

கற்பூர சுந்தரபாண்டியன்

இது மட்டுமில்லாமல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும், அதற்கான சான்றிதழ்களை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் கற்றுக் கொள்ளலாம். சிறுதானிய குக்கீஸ் தயாரிப்பில் என்னென்ன வகைகளை உற்பத்தி செய்யலாம் என்பது குறித்த தெரிந்துகொள்ள மாணவர்கள், விவசாயிகள், சுயதொழில் செய்ய ஆர்வமுள்ளவர்கள், இல்லத்தரசிகள் ஆகியோர் இந்தப் பயிற்சியில் கலந்துகொண்டு பயன்பெறலாம்

இங்கே கல்லூரியில் உள்ள இன்குபேஷன் மையத்தில் இயந்திரங்கள் உள்ளன. உறுப்பினர் கட்டண தொகையை செலுத்தி, இங்கே பொருள்களை உற்பத்தி செய்து, வெளியில் கொண்டு சென்று விற்பனை செய்து கொள்ளலாம். அதற்கும் வழிகாட்டுகிறோம்” என்று அழைப்பு விடுத்தார்.

சிறப்பம்சங்கள்

* ரசாயனமற்ற, கலப்படமற்ற இயற்கையான சிறுதானிய குக்கீஸ் தயாரிக்கும் வழிமுறைகள்.

* நெய், வெண்ணெய், தாவர எண்ணெய் பயன்படுத்தி சிறுதானிய குக்கீஸ் தயாரிக்கும் முறைகள்.

* சிறுதானியத்திலிருந்து சுவையான லட்டு தயாரிக்கும் முறைகள்.

* உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்ப கல்லூரியின் பிரத்யேக குக்கீஸ் தயாரிக்கும் தொழில்நுட்ப விளக்கம்.

* நிகழ்வில் சிறுதானிய குக்கீஸ் தயாரிப்பவர்களின் அனுபவ பகிர்வும் உண்டு.

சிறுதானிய குக்கீஸ் பயிற்சி அறிவிப்பு

* சிறுதானிய குக்கீஸ் மற்றும் தின்பண்டங்களுக்கான சந்தை மற்றும் விற்பனை வாய்ப்புகள்.

* பிஸினஸ் இன்குபேஷனில் உறுப்பினர் ஆவதற்கான வழிகாட்டல்கள்.

இன்னும்… இன்னும்

நாள்: 26-09-25 (வெள்ளிக்கிழமை).

நேரம் : காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை

இடம்: உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரி,

அலமாதி/கோடுவள்ளி (சென்னையில் இருந்து 27 கி.மீ), திருவள்ளூர் மாவட்டம்.

பயிற்சிக் கட்டணம் ரூ.1,200

பயிற்சியில் நோட்பேட், பேனா, தேநீர், சான்றிதழ், மதிய உணவு வழங்கப்படும்.

அறிவிப்பு

கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளவும். கூகுள் பே, அமேசான் பே, போன் பே, பே.டி.எம்… போன்ற UPI மூலம் கட்டணம் செலுத்தலாம்.
அறிவிப்பில் உள்ள கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்யவும் அல்லது
UPI Id: vikatanmedia17590@icici யிலும் கட்டணம் செலுத்தலாம்.
கட்டணம் செலுத்திய விவரம் மற்றும் உங்கள் முகவரியை 99400 22128 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பவும்.

மேலும் விவரங்களுக்கு:

99400 22128

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *