
புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு ஆம் ஆத்மி கட்சி எதிர்ப்புத் தெரிவித்தது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை மத்திய அரசு அவமானப்படுத்துவதாக டெல்லி பிரிவுத் தலைவர் சவுரப் பரத்வாஜ் குற்றம்சாட்டினார்.
ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் விளையாடும் போட்டி நாளை துபாயில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. இந்தப் போட்டிக்கு எதிராக மகாராஷ்டிரா முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படும் என்று சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.