
கோவை: திறமையுள்ள விளையாட்டு வீரர்களுக்கு அனைத்து உதவிகளையும் அதிமுக செய்யும் என கோவையில் இன்று (செப்.13) நடந்த நிகழ்வில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பேசினார்.
அதிமுக சார்பில், கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கிரிக்கெட் அணி வீரர்களுக்கு, விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி, கொடிசியா அருகேயுள்ள, தனியார் ஹோட்டல் வளாகத்தில் இன்று (செப்.13) நடந்தது. இந்நிகழ்வுக்கு முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தலைமை வகித்தார்.