• September 13, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்​பின் வரி​வி​திப்​பால் இந்​தியா பாதிக்​கப்​பட்​டிருக்​கிறது என்று காங்​கிரஸ் மூத்த தலை​வர் சசி தரூர் தெரி​வித்​துள்​ளார். இந்​திய ரியல் எஸ்​டேட் சங்​கங்​களின் கூட்​டமைப்​பான (கிரெ​டாய்) சார்​பில் சிங்​கப்​பூரில் கடந்த 11-ம் தேதி சிறப்பு கண்​காட்சி தொடங்​கியது. மூன்று நாட்​கள் நடை​பெறும் இந்த கண்​காட்​சி​யில் காங்​கிரஸ் மூத்த தலை​வர் சசி தரூர் சிறப்பு விருந்​தின​ராக பங்​கேற்​றுள்​ளார்.

அங்கு அவர் கூறிய​தாவது: இந்​திய பொருட்​களுக்கு அமெரிக்க அரசு 50 சதவீத வரி​வி​திப்பை அமல்​படுத்தி உள்​ளது. இதனால் இந்​தி​யா​வுக்கு பாதிப்​பு​கள் ஏற்​பட்டு உள்​ளன. ஏராள​மானோர் வேலை இழந்து உள்​ளனர். குறிப்​பாக குஜ​ராத்​தின் சூரத் நகரில் வைரம், தங்க நகை தொழிலில் ஈடு​பட்​டிருந்த 1.35 லட்​சம் பேர் வேலை இழந்து உள்​ளனர். இதே​போல மீன் ஏற்​றும​தி, உற்​பத்​தித் துறை சார்ந்த தொழிலா​ளர்​களும் வேலை இழந்து உள்​ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *