
புதுடெல்லி: ஏஐ உதவியுடன் உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்றை பிஹார் காங்கிரஸ் கட்சி இரு தினங்களுக்கு முன் வெளியிட்டிருந்தது. இதில் பிரதமர் மோடியின் கனவில் அவரது மறைந்த தாயார் வந்து, பிரதமர் மோடியின் பிஹார் அரசியல் குறித்து விமர்சனம் செய்வது போல் உள்ளது.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஜாத் பூனாவாலா சமூக ஊடகப் பதிவில் கூறியிருப்பதாவது: பிஹார் காங்கிரஸ் ஒரு அருவருப்பான வீடியோ மூலம் அனைத்து வரம்புகளையும் மீறிவிட்டது. இது, அக்கட்சியின் துஷ்பிரயோகத்தை காட்டுகிறது. பெண்களை அவமானப்படுத்துவது என்பது அக்கட்சியின் அடையாளமாக மாறிவிட்டது. நம்முடன் இல்லாதவர் பற்றி வீடியோ வெளியிட்டதற்கு காங்கிரஸ் வெட்கப்படவேண்டும்" என்று கூறியுள்ளார்.