• September 13, 2025
  • NewsEditor
  • 0

விழுப்புரம்: ​திண்​டிவனத்​தில் வன்​னியர் சங்க தலைமை அலு​வல​கத்​துக்கு உரிமை கோரி ராம​தாஸ் மற்​றும் அன்​புமணி ஆதர​வாளர்​களிடையே நேற்று மோதல் ஏற்​பட்​டது. மேலும் அலுவலகத்துக்கு பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விழுப்​புரம் மாவட்​டம் திண்​டிவனம் – மயிலம் சாலை​யில் உள்ள வன்​னியர் சங்​கம் தலைமை அலு​வல​கத்​தில், இடஒதுக்​கீடு போராட்​டத்​தில் உயி​ரிழந்த 21 தியாகி​களுக்​கு, கடந்த 38 ஆண்​டு​களாக செப்​.17-ம் தேதி அஞ்​சலி செலுத்​தப்​பட்டு வரு​கிறது. ஆண்டுதோறும் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் மரியாதை செலுத்துவது வழக்கம்.

மோதல் போக்கு தீவிரம்: தற்​போது ராம​தாஸ் மற்​றும் அன்​புமணி இடையே ஏற்​பட்​டுள்ள மோதலால், பாமக தொண்​டர்​கள் இரண்டு குழுக்​களாகப் பிரிந்​து, ஒரு​வரையொரு​வர் பரஸ்​பரம் குற்​றம்​சாட்டி விமர்​சிக்​கின்​றனர். இதற்​கிடையே, பாமக​வில் இருந்து அன்​புமணியை நீக்​கி​விட்​ட​தாக ராம​தாஸ் நேற்று முன்​தினம் அறி​வித்​துள்ள நிலை​யில், இரு தரப்​பினருக்​கும் இடையே மோதல் போக்கு மேலும் தீவிரமடைந்​துள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *