
சென்னை: தமிழகத்தில் முந்திரி உற்பத்தியை அதிகரித்து அந்த தொழிலைமேம்படுத்த தமிழ்நாடு முந்திரி வாரியம் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: முந்திரி உற்பத்தியை அதிகரிக்கவும், முந்திரிசார் தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கவும், முந்திரி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்கவும் ரூ.10 கோடியில் தமிழ்நாடு முந்திரி வாரியம் ஏற்படுத்தப்படும் என்று 2025-26-ம்ஆண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதை செயல்படுத்தும் விதமாக மாநில அளவிலான முந்திரி வாரியத்தை அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.