
மற்றவர்களை காட்டிலும் மது அருந்துபவர்கள் கொசுக்களால் ஈர்க்கப்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
நெதர்லாந்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் குழு மேற்கொண்ட ஆய்வின் முடிவில் பீர் நுகர்வோருக்கும் கொசு கடித்தலுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக bioRxiv என்ற ஆராய்ச்சி தளத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சில சமயங்களில் சிலரை மட்டும் கொசுக்கள் கடிக்கும், சிலர் எனக்கு கொசு கடிக்கவில்லை என்று கூறுவார்கள். இதனை புரிந்து கொள்ள விஞ்ஞானிகள் ஒரு ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.
நெதர்லாந்தில் நடைபெற்ற ஒரு பெரிய இசை விழாவில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள் தங்களது கைகளை கொசுக்கள் அடங்கிய ஒரு பெட்டியில் வைத்துள்ளனர் . கொசுக்கள் யார் கைகளை அதிகம் கடித்தன என்பது குறித்து முழுமையாக தகவல்கள் சேகரிக்கப்பட்டன.
இதற்கு முன்பு அவர்களின் அன்றாட வாழ்க்கை முறைகள் குறித்து கேட்டுகொண்டுள்ளனர். அதன்படி பீர் குடித்தவர்கள் கொசுக்களால் 1.3 மடங்கு அதிகமாக ஈர்க்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சன் ஸ்கிரீன் அதிகம் பயன்படுத்தாதவர்கள், தொடர்ந்து குளிக்காதவர்கள் மீது கொசுக்கள் அதிகமாக இருந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, கொசுக்கள் நேரடியாக மதுவால் ஈர்க்கப்படவில்லை மாறாக மது அருந்துபவர்களின் உடலில் ஏற்படும் துர்நாற்றங்களின் மூலம் ஈர்க்கப்படுகிறது.
பொதுவாக மது குடிப்பவர்கள் வித்தியாசமாக நடந்து கொள்வார்கள், நடனம் ஆடுவார்கள் அதிகமாக வியர்க்கும். இதனால் அவர்களின் உடலின் வாசனைகளில் மாற்றம் ஏற்பட்டு அந்த வாசனை கொசுக்களை ஈர்க்கிறது. கொசுக்கள் ஒரு குறிப்பிட்ட தொலைவில் இருந்தும் கூட மனித வாசனையை உணர முடியும் என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!