
ஹைதராபாத்: தெலங்கானாவில் கன மழையால் ஒரே நாளில் மின்னல் தாக்கி 8 பேர் உயிரிழந்தனர். தெலங்கானா மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. ஹைதராபாத் போன்ற நகரங்களில் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
சாலைகளில் மழை நீர் ஆங்காங்கே தேங்கியதில் முக்கிய சாலைகள் உட்பட பல இடங்களில் வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர். விஜயவாடா – ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் மழை காரணமாக போக்குவரத்து ஸ்தம்பித்தது.