
சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்து உடலுறுப்பு தானம் செய்தவர்களின் பெயர்கள் பதியப்பட்ட ‘மதிப்புச்சுவர்’ வரும் 30-ம் தேதி திறக்கப்படுகிறது. சென்னை சைதாப்பேட்டை சட்டப்பேரவை தொகுதி, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு 139, மேற்கு ஜோன்ஸ் சாலையில் உள்ள மயானத்தின் மேம்பாட்டுப் பணிகளை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.
அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து மயானக் கூடங்கள், குறிப்பாக எரிவாயு தகன மேடைகளை சீர்படுத்தி மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.