
புதுடெல்லி: டெல்லியில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் டெல்லி (மேற்கு) பி.எப். ஆணையராக பணியாற்றி வந்தவர் ஜெகதீஷ் தாம்பே. இவர், ஊழியர் ஒருவருக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கையில் அவருக்கு சாதகமாக தீர்ப்பதற்காக ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. பிறகு பேச்சுவார்த்தையில் இந்த தொகையை தாம்பே பாதியாக குறைத்துள்ளார்.
இது தொடர்பாக அந்த ஊழியர் சிபிஐ-யில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் கூறியபடி ரூ.1.50 லட்சம் பணத்தை ஜெகதீப் தாம்பேவிடம் அந்த ஊழியர் நேற்று கொடுத்தார். அப்போது மறைந்திருந்த சிபிஐ அதிகாரிகள், ஜெகதீஷ் தாம்பேவை கையும் களவுமாக பிடித்தனர். பிறகு அவரை கைது செய்தனர்.