
சுதர்சன ஹோமம் யாரெல்லாம் எதற்கெல்லாம் செய்ய வேண்டும் தெரியுமா! சங்கல்பித்தால் சங்கடங்கள் தீரும்! ஸ்ரீசுதர்சன ஹோமம் வரும் 2025 செப்டம்பர் 17 வத்தலகுண்டு ஸ்ரீசுந்தர மந்திராலயம் ஸ்ரீஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் ம்ருத்திகா பிருந்தாவனத்தில் நடைபெற உள்ளது.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 66802980/07
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
ஸ்ரீவிஷ்ணு பகவான் சுதர்சனச் சக்கரத்தை ஏந்தி இருக்கும்போது போது, அவர் சுதர்சனராகவும் வணங்கப்படுகிறார். விஷ்ணு பகவான் தனது பக்தர்களின் துன்பங்களுக்கு முடிவு தர தனது ஸ்ரீசக்கரத்தைப் பயன்படுத்துகிறார் என்கிறது புராணம். சுதர்சனரைப் பார்த்தாலே தீமைகள் நீங்கி மங்கலம் உண்டாகும். சு என்றால் மங்கலம் தர்சனா என்றால் பார்வை. மங்கல பார்வை என்றே சுதர்சனர் வணங்கப்படுகிறார்.
ஸ்ரீசுதர்சன சக்கரம் சத்ருக்களை அழிக்கும் ஆயுதம் மட்டுமல்ல. அது கஜேந்திரனைக் காத்த அபய மூர்த்தியும் கூட என்கின்றன புராணங்கள். அதுவே ஞானமும் முக்தியும் அளிக்க வல்லது என்றும் பக்தர்கள் நம்புகிறார்கள். ஸ்ரீசுதர்சன சக்கரத்தில் 108 கத்திகள் உள்ளன. இவை பக்தர்களைக் காக்கும் வல்லமை கொண்டவை.
ஸ்ரீசக்கரம் அக்னி பகவானின் அம்சமாக இருப்பதால் எந்த ஒரு தீங்கையும் அது பொசுக்க வல்லது. இத்தனைச் சிறப்பான ஸ்ரீசுதர்சன மூர்த்தியை ஸ்ரீசுதர்சன ஹோமம் செய்து வழிபட்டால் அருளும் அபிவிருத்தியும் சுபீட்சமும் பெருகும் என்பது நம்பிக்கை.

சரி எதற்கெல்லாம் சுதர்சன ஹோமம் செய்ய வேண்டும்!
வீட்டில் எப்போதும் அமைதி இல்லாமல் இருப்பவர்கள். தொட்டதெல்லாம் தோல்வி, அவமானம், இழப்பு என அவதிப்படுபவர்கள். மங்கல காரியங்கள் எல்லாம் தள்ளிப் போவது. கடன்-தரித்திரம், பொருளாதார கஷ்டங்கள் சூழ்ந்தவர்கள்.
விபத்து, நோய்கள், வீணான அச்சங்கள் கொண்டவர்கள். வம்பு, சண்டை, வழக்கு, கண் திருஷ்டி, எதிரிகள் தொல்லை, வேலையில் பிரச்னை, முன்னேற முடியாத அளவுக்குச் சூழ்ச்சி, தீய சக்திகளால் அஞ்சுபவர், காரணமே தெரியாமல் பிரச்னைகள் மாற்றி மாற்றி வருவது எனக் கஷ்டப்படும் அனைவருக்குமே ஒரு சிறந்த பரிகார பூஜை என்றால் அது ஸ்ரீசுதர்சன ஹோமமே எனலாம்.

சரி யாரெல்லாம் செய்யலாம்!
ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பதாக அறிபவர்கள், பிரம்மஹத்தி தோஷம் உள்ளவர்கள், நாக தோஷம் கொண்டவர்கள், அறிந்தோ அறியாமலோ தவறு செய்துவிட்டு அதனால் வருந்துபவர்கள் என துக்கத்தில் உள்ள அனைவரும் நிவாரணம் பெற்று நலமோடும் வளமோடும் வாழ இந்த ஹோமத்தில் கலந்து கொள்ளலாம்.
சிறப்பு மிக்க ஸ்ரீசுதர்சன ஹோமம் வரும் 2025 செப்டம்பர் 17 புதன்கிழமை காலை 9.00 மணி அளவில் வத்தலகுண்டு ஸ்ரீசுந்தர மந்திராலயம் ஸ்ரீஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் ம்ருத்திகா பிருந்தாவனத்தில் நடைபெற உள்ளது. காரியத் தடைகளைத் தகர்த்து உங்கள் எதிர்காலக் கனவுகளை நிஜமாக்கும் இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு 48 நாள்களில் தீர்வு பெறுங்கள்!
சாந்நித்யம் மிக்க இந்த பிருந்தாவனத்தில் சக்தி விகடன் வாசகர்களின் நலனுக்காக இந்த சுதர்ஸன ஹோமம் நடைபெற உள்ளது. கலந்து கொண்டு பலன் பெறுங்கள்!
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 66802980/07
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
ஸ்ரீராகவேந்திரரின் பக்தரான T.N.சுந்தரராஜ ராவ் அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டு உருவான இந்த பிருந்தாவனத்துக்கு வந்தவர்கள் பெற்ற பலன்கள் அநேகம். அவரது வழியையொட்டி தற்போது அவரது குமாரர் B.S. கோபிநாதன் அவர்களின் இந்த பிருந்தாவனத்தை நிர்வகித்து வருகிறார். 1974-ம் ஆண்டு மந்திராலயம் சென்ற ராகவேந்திர தாசர் ஸ்ரீமான் T.N.சுந்தரராஜ ராவ் அவர்களுக்கு மந்திராலய பீடாதிபதி ஸ்ரீஸ்ரீ கஜயீந்திர சுவாமிகளால் வழங்கப்பட்ட ஸ்ரீராகவேந்திரர் ம்ரித்திகை இங்கு மூல மூர்த்தமாக எழுந்தருளி உள்ளது. ம்ரித்திகை ரூப வடிவில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் இங்கு சூட்சும வடிவிலும் பக்தர்களைக் காத்து வருகிறார். ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் இங்கே சாளக்கிராம வடிவில் எழுந்தருளி உள்ளார்.
ஸ்ரீமான் T.N.சுந்தரராஜ ராவ் காஞ்சி மகாபெரியவரின் மதிப்புக்குரியவராக வாழ்ந்தவர். சென்னை நங்கநல்லூர் ராஜராஜேஸ்வரி ஆலய நிர்மாணப் பணியில் ஆரம்ப காலத்தில் தொண்டாற்றியவர் ஸ்ரீமான் T.N.சுந்தரராஜ ராவ். இவரின் அற்புத ஆற்றலால் பிணியும் கவலையும் நீங்கியர்கள் பலர். எல்லாம் ராகவேந்திரரின் அருள் என்று வாழ்ந்தவர்கள் இவர்கள் குடும்பத்தினர்.

இன்றும் இந்த மந்திராலயத்தில் வந்து ஸ்ரீராகவேந்திரரின் சூட்சும வடிவைக் கண்டு அருள் பெற்று செல்பவர்கள் அநேகம் என்கிறார்கள் இங்குள்ள பக்தர்கள். இத்தனை பெருமைமிக்க ஆலயத்தில் இந்த சுதர்சன ஹோமம் நடைபெற உள்ளது. காரியத் தடைகளைத் தகர்த்து உங்கள் எதிர்காலக் கனவுகளை நிஜமாக்கும் இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு 48 நாள்களில் தீர்வு பெறுங்கள்!
வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு சிறப்பு ரட்சை , அட்சதை மற்றும் குங்குமம் அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் – புதுவை பகுதிகளுக்கு மட்டும்). வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 66802980/07