• September 11, 2025
  • NewsEditor
  • 0

இந்த அங்கீகாரம், மருத்துவத் துறையில் டாக்டர் சந்திரகுமார் செய்த முன்னோடி பங்களிப்பையும், ‘இந்தியாவின் மருத்துவத் தலைநகரம்’ என சென்னையின் மதிப்பை உயர்த்திய அவரது முக்கிய பங்கையும் வெளிப்படுத்துகிறது. இது, சென்னையை உலகின் மிக வாழத் தகுந்த நகரமாக மாறும் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

மருத்துவத் துறையை மாற்றியமைத்த தலைவர் :

மருத்துவத் தொழில்முனைவோர், நிறுவனர், சிந்தனைத் தலைவர் எனப் பல்வேறு அடையாளங்களுடன் விளங்கும் டாக்டர் சந்திரகுமார், இந்தியாவில் நவீன மருத்துவ சேவையை மாற்றியமைத்த முக்கிய நபராக பார்க்கப்படுகிறார். அவரின் தலைமையில் காவேரி மருத்துவமனைகள் குழுமம், முன்னோட்டமான மருத்துவ அறிவியலை நோயாளி மையக் கண்ணோட்டத்துடன் இணைத்து, நாட்டின் மிகவும் மதிக்கப்படுகிற மருத்துவ வலையமைப்புகளில் ஒன்றாக வளர்ந்துள்ளது.
அவருடைய தொலைநோக்கு பார்வை, தரமான சிகிச்சையை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு, சென்னை நகரை “சுகாதாரச் சிறப்பின் மையம்” என வலியுறுத்தி, அதன் உலகளாவிய மதிப்பையும் உயர்த்தியுள்ளது.

இந்த விருதைப் பெற்றதையொட்டி டாக்டர் எஸ். சந்திரகுமார் கூறியதாவது:

“இந்த அங்கீகாரம் எனக்கு ஊக்கமும் பணிவும் அளிக்கிறது. மருத்துவம் என்பது சிகிச்சை மட்டுமல்ல – அது கருணை, அணுகல்தன்மை, நம்பிக்கை ஆகியவற்றை உள்ளடக்கியது. உலகத் தரத்திலான மருத்துவத்தை ஒவ்வொரு நோயாளிக்கும் கொண்டு சேர்க்க தினமும் உழைக்கும் ஆயிரக்கணக்கான காவேரி மருத்துவமனையின் சக ஊழியர்களுடன் இதை பகிர்ந்து கொள்கிறேன். நாட்டின் மருத்துவத் தலைநகரமாக சென்னையின் ஊக்கமூட்டும் முன்னணியின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமைப்படுகிறேன். சென்னை உலகின் மிக வாழத்தக்க நகரமாக மாறும் கனவுக்குப் பங்களிப்பதில் நான் மகிழ்கிறேன்.”

சூப்பர் சென்னை – நகர மாற்றத்தின் தூண் :
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, சூப்பர் சென்னை நிர்வாக இயக்குநர் திரு. ரஞ்சீத் ரதோட் கூறியதாவது:

“சூப்பர் சென்னை என்பது நம் நகரத்தை வலுவானதாகவும், பெருமைப்படத்தக்கதாகவும், வாழத் தகுந்ததாகவும் மாற்றிப் பார்ப்பதற்கான முயற்சி. எங்கள் ‘Icon of the Month’ நிகழ்வு, இத்தகைய மாற்றத்தின் உணர்வை எடுத்துக்காட்டும் நபர்களை கௌரவிக்கிறது. டாக்டர் சந்திரகுமாரை கௌரவிப்பதன் மூலம், நாங்கள் நவீன மருத்துவ முன்னோடியை மட்டுமல்ல, தினமும் ஆயிரக்கணக்கானோரின் வாழ்வில் தாக்கம் ஏற்படுத்தி, சென்னையின் உலகளாவிய மரியாதையை உயர்த்தும் மாற்றத்தின் முன்னோடியையும் அங்கீகரிக்கிறோம்.”

சூப்பர் சென்னை-யின் ‘Icon of the Month’ முயற்சி, தொழில்முனைவோர், புதுமையாளர்கள், மாற்றத்தின் முன்னோடிகளை முன்னிறுத்துகிறது. முன்னதாக, இவ்விருது பெண்கள் தொழில்முனைவில் செய்த பங்களிப்புக்காக நேச்சுரல்ஸ் சலூன் இணை நிறுவனர் சி.கே. குமாரவேல் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *