• September 11, 2025
  • NewsEditor
  • 0

டிஜிட்டல் விருதுகள் 2025

டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் கலைஞர்களைக் கொண்டாட திட்டமிட்டிருக்கிறது விகடன். அதற்கெனப் பிரத்யேகமாக `விகடன் டிஜிட்டல் விருதுகள்’ விழாவையும் முதல் முறையாக நடத்தவிருக்கிறது விகடன்!

`Best Solo Creator – Male’, `Best Solo Creator – Female’, `Best Couple Creator’ என மொத்தமாக 27 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன. விருதுகளின் ஒவ்வொரு பிரிவின் நாமினேஷனுக்காகத் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்திருந்தது.

Vikatan Digital Awards – 2025

யூட்யூப், இன்ஸ்டாகிராம் என டிஜிட்டல் தளத்தில் அதகளப்படுத்திக் கொண்டிருக்கும் பலரும் அந்த நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்கள். கோலாகலத்திற்குப் பஞ்சமின்றி பிரமாண்டமாக இந்த விருது விழா வருகிற செப்டம்பர் 13-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடக்கவிருக்கிறது. நம் ஃபேவரைட் சோசியல் மீடியா பிரபலங்கள் பலரும் இந்த விழாவில் கலந்துக் கொண்டு விருது பெறவிருக்கிறார்கள்.

இப்போது, விருதுகளை வெல்லப் போகும் வெற்றியாளரையும் அவர்களைப் பற்றிய விவரங்களையும் நம் விகடன் இணையதளத்தில் ஒவ்வொன்றாகத் தொடர்ந்துப் பார்க்கலாம்.

Best Food Reviewer

இப்பிரிவில் Foodies Findings, Peppa Foodie, D Square Vlogs, The Chennai Foodie, Food Impramation, Madras Foodie, Idris Explores, Tinta Food Dairies, Sathya Foodie, The Dining Chennai ஆகிய சேனல்கள் நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றிருந்தன. ஜூரிகளின் தேர்வுபடி இந்தப் பிரிவின் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது, `Foodies Findings’ சேனல்!

Best Food Reviewer - Nomination Lists
Best Food Reviewer – Nomination Lists

Best Food Reviewer – Foodies Findings

கோயில் பிரசாதங்களோடும், டீயும் டீ சார்ந்த பண்டங்களோடும் கூட வெரைட்டியாய் `ஒண்டே மேட்ச்’ ஆடுவது இந்த கலகல Foodie-யின் கலக்கல் ஸ்டைல்! `ஒரு நாள் ஒரு சுவை’ என உணவுகளோடு உணர்வுகளையும் கலந்து நம் சுவை நரம்புகளைத் தட்டியெழுப்பி வருகிறார் ‘அறுசுவை ராணி’ யுவராணி.

Foodies Findings
Foodies Findings

உணவில் வித்தியாசம் பார்க்காமல், தகவல்களையும் வழிகாட்டலையும் அன்லிமிட்டெட் மீல்ஸாக்கி விருந்து படைக்கும் Foodies Findings யுவராணிக்கு, Best Food Reviewer விருதையே விருந்தாக அளிக்கிறது விகடன்!

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *