
தென்காசி நகராட்சிக்கு சொந்தமான மலையான் தெருவில், ஆறாவது வார்டில் உள்ள சமுதாய நலக்கூடம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ரேஷன் கடையாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இதனால் அப்பகுதி மக்கள் சுப நிகழ்ச்சிகளுக்காக சமுதாய நலக்கூடத்தை பயன்படுத்த முடியாமல் சிரமப்படுவதாக கூறப்படுகிறது.
அதனை மீண்டும் அப்பகுதி மக்கள் சுப நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்தும் வகையில் சமுதாய நலக்கூடமாக மாற்ற வேண்டும் எனக் கோரி, தென்காசி நகராட்சி அலுவலகம் முன்பு தென்காசி மாவட்ட பா.ஜ.க. துணைத் தலைவர் முத்துக்குமார் பாய் விரித்து படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
நகர்மன்ற தலைவர் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறிய நிலையில் போராட்டத்தை அவர் கைவிட்டார்.
திடீரென நகராட்சி அலுவலக வாசலில் பா.ஜ.க. நிர்வாகி பாய் விரித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம், சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.