• September 11, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: மதுரை​யில் விஜயகாந்த் சகோ​தரி விஜயலட்​சுமி (78) உடல் நலக்​குறை​வால் கால​மா​னார். அவரது உடலுக்கு தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமல​தா, சுதீஷ் ஆகியோர் அஞ்​சலி செலுத்​தினர். தேமு​திக நிறு​வனத் தலை​வ​ரான விஜய​காந்​தின் சகோ​தரி​யும், மருத்​து​வரு​மான விஜயலட்​சுமி மதுரை​யில் மருத்​து​வ​மனை நடத்​தி​னார். இவரது கணவர் துரை​ராஜ், நரம்பு சுருள் நோய் தடுப்பு நிபுண​ராக உள்​ளார்.

உடல்நலக்குறைவு: வயது மூப்பு காரண​மாக சென்​னை​யில் உள்ள அவரது மகன் வீட்​டில் வசித்து வந்த விஜயலட்​சுமி உடல் நலக்​குறை​வால் நேற்று முன்​தினம் கால​மா​னார். சென்​னை​யில் இருந்து கொண்டு வரப்​பட்ட அவரது உடல், இறுதி அஞ்​சலிக்​காக மதுரை அண்ணா நகரில் உள்ள அவரது இல்​லத்​தில் வைக்​கப்​பட்​டது.

தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமல​தா, பொருளாளர் சுதீஷ், இளைஞரணிச் செய​லா​ளர் விஜயபிர​பாகரன், அவரது தம்பி சண்​முக பாண்​டியன் ஆகியோர் விஜயலட்​சுமி​யின் உடலுக்கு அஞ்​சலி செலுத்​தினர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *