
சென்னை: தெற்கு ரயில்வேயில் முதல் அம்ரித் பாரத் விரைவு ரயில் (ஏசி இல்லாத நீண்ட தூரம் செல்லும் ரயில்) தமிழகத்தில் ஈரோடு – பிஹாரில் ஜோக்பனி இடையே இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி வரும் 15-ம் தேதி தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டிலேயே அதிவேக ரயிலாக வந்தே பாரத் ரயில் உள்ளது. சென்னை ஐசிஎஃப் ஆலையில் தயாரிக்கப்பட்ட இந்த ரயில்கள் நாட்டின் பல்வேறு நகரங்கள் இடையே இயக்கப்படுகின்றன.